×

இரவில் மாட்டு கொட்டகையாக மாறும் பந்தலூர் பஸ் ஸ்டாண்ட்

பந்தலூர் : பந்தலூர் புதிய பஸ் நிலையம் மாட்டு கொட்டகையாக மாறி வருவதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  பந்தலூர் தாலுகாவில் ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர் தாலுகாவாக அரசு  அறிவித்து 20 வருடங்களாகிறது.பந்தலூர் தாலுகாவின் தலைநகர் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அரசு பேருந்துகளை சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றனர். இதனால் போக்குவரத்து பிரச்னைகள் ஏற்பட்டது. அதனால் பந்தலூரில் பஸ் நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நெல்லியாளம் நகராட்சி சார்பில் பந்தலூரில் பஸ் நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. பஸ் நிலையத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் இரவில் மாடுகளின் கொட்டகையாக உருமாறி உள்ளது. இதனால் பகலில் பஸ் நிலையம் முழுதும் மாட்டு சாணமாக உள்ளது. தினமும் இதை தூய்மை படுத்துவது துப்புரவு பணியாளர்களுக்கு சிரமமாக உள்ளது.

 மேலும் பயணிகள் பஸ் நிலையத்தில் நின்று,அமர்ந்து பேருந்துகளில் ஏறி செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்திற்குள் மாடுகள் புகாதவாறு பாதுகாப்பு பணிகளை நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus stand ,cow dump , pandaloor, bus stand, cow dump, night
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...